“எதிர் நீச்சல்”: கதிரின் திட்டத்தை அறிந்த கரிகாலன்!- சவால் விட்ட ஜனனி.

photo

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் புதிய ஆதி குணசேகரன் வந்ததில் இருந்து கதை கலைகட்டியுள்ளது. இந்த நிலையில் தனது தந்தையிடமே ஜனனி சவால் விடும் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

photo

அதில் “ உங்க ஆசைக்காக கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க இவர் இங்க பாடா பட்டுகிட்டு இருக்கா என ஈஸ்வரி ஜனனியின் அப்பாவிடம் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் அவள பாத்து நீ ஃபெயிலியர்னு சொல்றீங்களே? இது நியாமா? என கேள்வி கேட்கிறார். இந்த கதை ஒரு பக்கம் நடக்க கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் மூவரும் காரில் செல்கின்றனர். அப்போது கதிர்’ அண்ணன் சொன்னத ஒரு பிசிறு கூட இல்லாம முடிக்கிறேன்’ என கூற அப்பத்தாவ முடிக்க போறீங்களா என கரிகாலன் கச்சிதமாக புடித்துவிடுகிறார். இதனால் கதிர், ஞானம் இருவரும் அதிர்ந்து விடுகின்றனர்.

தொடர்ந்து ஜனனி தனது தந்தையிடம், எந்த சக்திய கல்யாணம் பண்ணுனதால் நான் தோத்து போய்டன்னு நீங்க சொல்றீங்களோ அதே சக்தியோட சேந்து நான் ஜெயிப்போன் என சவால் விடுகிறார். “ இப்படியாக இந்த புரொமோ முடிகிறது.

Share this story