எதிர்நீச்சல்: ஜான்சிராணியை அறைந்த ஈஸ்வரி!.....- பரபரப்பான புரொமோ.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு அந்த வகையில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடருக்கு பல தரப்பட்ட வயதினரும் ரசிகர்களாக உள்ளனர். அந்த சீரியலிலிருந்து தற்போது பரபரப்பான புரொமோ வெளியாகியுள்ளது.
அதாவது அப்பத்தா கொலை வழக்கில் ஜீவானந்தம் சிக்கியிருக்க அவரை காப்பாற்ற ஜனனி மற்று சக்தி போராடுகின்றனர். இதை தொடர்ந்து இன்றைய புரொமோவில் குணசேகரன், கரிகாலன் மற்றும் அவரது இரண்டு தம்பிகள் அனைவரும் காவல் நிலையம் செல்கின்றனர். அந்த சமயம் பார்த்து ஆதிரை, கரிகாலன் கட்டிய தாலியை கழற்றி வீசுகிறார். இதனால் கோபம் கொண்ட ஜான்சிராணி ஆதிரையை அடிக்க, அதை பார்த்த ஈஸ்வரி கொந்தளித்து ஜான்சிராணியின் கன்னத்தில் பளார் என அறைவிடுகிரார். அது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் ஜான்சியை வீட்டை விட்டு வெளியில் துரத்துகின்றனர். இந்த புரொமோ வரும் எபிசோடிற்கான எதிர்பார்பை கூட்டியுள்ளது.