எதிர் நீச்சல்: மகனுடன் சென்று ஜீவானந்தத்தை சந்திக்கும் ஈஸ்வரி.

photo

எதிர்நீச்சல் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் தனது மகன் தர்ஷனுடன் சென்று ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திக்கும் புரொமோ வெளியாகியுள்ளது.

photo

 ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை மீட்க ஆதி குணசேகரன் ஒரு புறம் போராடி வரும் நிலையில், தனது மனைவி ஈஸ்வரியை ஜீவானந்தம் திருமணம் செய்ய விரும்பிய  செய்தி கேட்டு ஆத்திரத்தில் அவரை விவாகரத்து செய்ய துணிந்தார் ஆதி குணசேகரன். மற்றொரு புறம் நந்தினி ‘Nandy foods’ என்ற பெயரில் சிறிய கேட்ரிங் ஒன்றை ஆரமித்துள்ளார். அதேப்போல ரேணுகா தனது மகள் படிக்கும் பள்ளியில் நடன ஆசிரியையாக இணைந்துள்ளார். சக்தி, ஜனனி இருவரும் இணைந்து புதிய கம்பெனி ஒன்றை திறந்துள்ளனர். இவை அனைத்தும் ஆதி குணசேகரனுக்கு தெரியாமல் அனைவரும் செய்கின்றனர்.   

photo

இந்த நிலையில் நந்தினி தனது முதல் ஆர்டரை முடித்து விட்டு சந்தோஷமான விஷயத்தை தனது அம்மாவிடம் கூறி  ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அத்தை விசாலாட்சியிடம் கூறுகிறார் அந்த இடத்திற்கு கரிகாலன் வர… அவரை சமாளித்து வெளியே அனுப்பி விடுகின்றனர்.  தொடர்ந்து தனது மகன் தர்ஷனுடன் சென்று ஜீவானந்தத்தையும் அவரது மகளையும் சந்திக்கிறார் ஈஸ்வரி. இந்த விஷயம் ஆது குணசேகரனுக்கு தெரிந்தால் என்னவாகுமோ!

Share this story