முடிவுக்கு வரும் பிரபல சீரியல்... சோகத்தில் ரசிகர்கள் !

abhiyum nanum

பிரபல சீரியலான 'அபியும் நானும்' சீரியல் விரைவில் முடியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சன் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் அத்தனை சீரியலும் இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘அபியும், நானும்’, இந்த தொடர் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பார்க்கக் கூடிய வகையில் கதை உள்ளது.

அபியும் நானும் சீரியலில் அரவிந்த் ஆகாஷ், ரியா மனோஜ், வித்யா மோகன், பேபி நிதிஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லதா சேதுபதி, யமுனா சின்னதுரை, கிரிஜா, ரம்யா கவுடா, அகிலா பிரகாஷ், குறிஞ்சி நாதன் மற்றும் ராஜ்கமல் ஆகியோரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்த சீரியல் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'அபி மாட்டு நானு' சீரியலின் ரீமேக்காக ஒளிப்பரப்பாகி வந்தது. இந்த சீரியலில் அரவிந்த் ஆகாஷ், ரியா மனோஜ், வித்யா மோகன், பேபி நிதிஷ், மூத்த நடிகை லதா, யமுனா, கிரிஜா, ரம்யா கவுடா, அகிலா பிரகாஷ், குறிஞ்சிநாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. 

 விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் இந்த தொடரை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதியுடன்‌ நிறைவுபெற உள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story