‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை...ரசிகர்கள் அதிர்ச்சி !

dharshana

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இருந்து நடிகை தர்ஷ்னா ஸ்ரீபால் திடீரென் விலகியுள்ளார். 

வட இந்தியாவை சேர்ந்தவர் பிரபல சீரியல் நடிகை தர்ஷ்னா ஸ்ரீபால். பிறந்தது வட இந்தியாவில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாமே திருச்சியில்தான். ஃபேஷன் டிசைனிங்கில் உள்ள ஆர்வத்தால், பல நிறுவனங்களில் பணியாற்றினார். அதன்பிறகு சன் டிவி குழுமத்தின் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். 

dharshana

சன் டிவியின் பிரபலத்தை வைத்து ‘சித்தி 2’சீரியலில் ராதிகாவின் மகள் யாழினியாக நடித்தார். முதலில் அமைதியான ரோலில் நடித்து வந்த அவர், பின்னர் பயங்கரமான வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதையடுத்து தற்போது விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரின் கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 

dharshana

இந்நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளதாக தர்ஷ்னா தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் தர்ஷ்னா விலகியது தவறு என எனவும், அவரே தொடர்ந்து நடிக்கவேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

Share this story