‘கிழக்கு வாசல்’ சீரியலில் பிரபல நடிகை.. யாரு அவங்க தெரியுமா ?

Vaishnavi Nayak

 பிரபல சீரியல் நடிகையான வைஷ்ணவி புதிய சீரியல் நடிக்கவுள்ளார். 

பிரபல நடிகையான ராதிகா, விஜய் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கிழக்கு வாசல்’ என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். இந்த சீரியலில் ராதிகாவுடன் இணைந்து நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான  எஸ்.ஏ.சந்திரசேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

Vaishnavi Nayak

பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய சீரியல்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் நடிகை அஸ்வினி ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.‌  மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைஷ்ணவி இணைந்துள்ளார். சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ வசு என்ற கதாபாத்திரத்தில் வைஷ்ணவி நடித்து வந்தார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த கதாபாத்திரத்தை குறைந்ததன் மூலம் தற்போது அந்த சீரியலிலிருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story