சின்னத்திரை பிரபலம் கோவை குணா மறைவு.. சோகத்தில் ரசிகர்கள் !

kovai guna

சின்னத்திரை பிரபலம் கோவை குணா உடல் நலக்குறைவால் இறந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சின்னத்திரையில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர் கோவை குணா, கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல சின்னத்திரை நிகழ்ச்சி கலந்துக் கொண்டு தன்னுடைய தனி திறமையை நிரூபித்தவர். காமெடி மட்டுமல்லாமல் பல குரல்களில் மிமிக்ரி செய்து அசத்துவதில் வல்லவராக நிகழ்ந்தவர். 

kovai guna

இவரது ஸ்டாண்ட் அப் காமெடிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். சின்னத்திரையை அடுத்து சினிமாவிற்கு சென்ற அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. கொரானா நோய் பரவல் தொடங்கிய நேரத்தில் சொந்த ஊரான கோவைக்கே சென்று செட்டிலாகிவிட்டார். 

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கடந்த சில மாதங்களாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக திடீரென இன்று மரணமடைந்துள்ளார். அனைவரையும் தனது காமெடியால் சிரிக்க வைத்த அவர், திடீரென மறைந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story