முதலில் அண்ணா... அப்புறம் காதல்.. கணவருடன் காதல் குறித்து பேசிய ஆல்யா மானஸா !

alaya manasa

தனது கணவர் மீது காதல் கொண்டது குறித்து சுவாரஸ்சிய தகவல்களை சீரியல் நடிகை ஆலியா மானசா தெரிவித்துள்ளார். 

சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவி மற்றும் ஆல்யா மானஸா. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அதன்பிறகு இருவரும் காதலிப்பதாக திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

alaya manasa

இந்நிலையில் சஞ்சய் மீது காதல் உருவானது எப்படி என்று சுவாரஸ்யமான விஷயங்களை நடிகை ஆல்யா மானஸா தெரிவித்துள்ளார். அதில் மாடலிங்கில் இருக்கும்போதே படப்பிடிப்பில் அவரை சைட் அடிப்பேன். முதலில் அவரிடம் பேசும்போது அண்ணா என்றே‌ அழைத்தேன். அதன்பிறகு 'ராஜா ராணி' சீரியலில் அவருடனே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

பின்னர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதும் அவரை பார்த்த அசடு வழிந்துக் கொண்டிருப்பேன்‌.  சீரியலில் நடித்தபோது எங்களுள் ஒரு புரிதல் ஏற்பட்டதால் அது காதலாக மாறியது. இப்போது திருமணம் நடந்தாலும் அவரை தீவிரமாக காதலித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். 

Share this story