கர்ப்பகால போட்டோஷூட்டை வெளியிட்ட நக்ஷத்ரா..‌ இணையத்தில் வைரல் !

nakshathra

'யாரடி நீ மோகினி' சீரியல் நடிகை நக்ஷ்த்ராவின் கர்ப்பகால போட்டோஷூட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

nakshathra

ஜீ தமிழில் நீண்ட நாட்களாக ஒளிப்பரப்பாகி வந்த பிரபல சீரியல் 'யாராடி நீ மோகினி'. கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நக்ஷத்ரா கதாநாயகியாகவும், சைத்ரா வில்லியாகவும் நடித்தனர். ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நக்ஷத்ராவின் அப்பாவித்தனமான நடிப்பும், சைத்ராவின் வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

nakshathra

இந்த சீரியல் கடந்த ஆண்டு நிறைபெற்றதையடுத்து கலர்ஸ் தமிழில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் 'வள்ளி திருமணம்' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களை தயாரித்து வரும் விஷ்வா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக நக்ஷ்த்ரா காதலித்து வந்தார்.‌ 

nakshathra

அதன்பிறகு கடந்தாண்டு விஷ்வா மற்றும் நக்ஷத்ரா ஆகிய இருவரும் திருமணம் செய்துக்கொண்டர். இதையடுத்து சமீபத்தில் நக்ஷ்த்ரா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் தனது கர்ப்பகால புகைப்படங்களை நடிகை நக்ஷத்ரா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story