சொகுசு கார் வாங்கிய பிரபல சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள் !

rema ashok

பிரபல சீரியல் நடிகையான ரீமா அசோக், சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 

விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்கள் சொகுசு வாங்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ரீமா அசோக். அந்த வகையில் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ரீமா அசோக். 

rema ashok

 அதன்பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, ரெக்கக்கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி, நாச்சியார்புரம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். பன்முக திறமைக் கொண்ட இவர், மேக்கப் ஆர்டிஸ்ட்டாகவும் வலம் வருகிறார். 

rema ashok

இந்நிலையில் புதிய கார் ஒன்றை நடிகை ரீமா அசோக் வாங்கியுள்ளார். சொகுசு வகையை சேர்ந்த டாட்டா ஹரியர் என்ற மாடல் கார் வாங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் விலை 20 முதல் 24 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

rema ashok

 

 

 

Share this story