செம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ரோஷ்னி... லேட்டஸ்ட் க்ளிக் !

roshini

பிரபல சீரியல் நடிகை ரோஷ்னியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

roshini

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். கருப்பாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ரோஷ்னியின் ‘கண்ணம்மா’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

roshini

கருப்பாக இருப்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினாரோ, அதுதான் இந்த சீரியலில் அவரை கவர காரணமாக இருந்தது. ரோஷ்னியின் நடிப்பு நிஜ கண்ணம்மாவாக அவரை பார்க்க தோன்றியது. ஆனால் திடீரென அவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகினார். அவரது விலகல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அந்த சீரியலின் டிஆர்பியே குறைந்துவிட்டது. 

roshini

சீரியலுக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்த முயற்சித்து வந்தார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் ரோஷ்னிக்கு கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றார். டைட்டில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  

மேக்கப் போடாமலேயே அழகாக இருப்பவர் ரோஷ்னி. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புகளை பெற மாடர்ன் மற்றும் புடவையில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை ரோஷ்னி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரோஷ்னியா என வியந்து பார்க்கின்றனர் ரசிகர்கள். 

Share this story