புதிய சீரியலில் ஹீரோயினாகும் விஜே தர்ஷனா...

vj dharshana

புதிய சீரியல் மூலம் விஜே தர்ஷனா மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறார். 

 வட இந்தியாவை சேர்ந்தவர் பிரபல சீரியல் நடிகை தர்ஷ்னா ஸ்ரீபால். பிறந்தது வட இந்தியாவில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாமே திருச்சியில்தான். ஃபேஷன் டிசைனிங்கில் உள்ள ஆர்வத்தால், பல நிறுவனங்களில் பணியாற்றினார். அதன்பிறகு சன் டிவி குழுமத்தின் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.  

vj dharshana

சன் டிவியின் பிரபலத்தை வைத்து ‘சித்தி 2’சீரியலில் ராதிகாவின் மகள் யாழினியாக நடித்தார். முதலில் அமைதியான ரோலில் நடித்து வந்த அவர், பின்னர் பயங்கரமான வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதையடுத்து தற்போது விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரின் கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 

vj dharshana

சமீபத்தில் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் இருந்து தர்ஷ்னா விலகினார்.  அவரது விலகல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தர்ஷனா வருகிறார். பெண்களை முன்னிறுத்தி உருவாகும் இந்த சீரியலில் ஹீரோயினாக தர்ஷனா நடிக்கிறார். இந்த சீரியலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.  ‌ 

Share this story