மாஸ் என்ட்ரி கொடுக்கும் திருச்செல்வம்... ‘எதிர் நீச்சல்’ சீரியலில் ஏற்படும் திருப்பம் !

ethir neechal

‘எதிர் நீச்சல்’ சீரியலில் பிரபல இயக்குனர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார். 

 சன் டிவியில் நெம்பர் இடத்தை பிடித்துள்ள சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியல் ஒளிப்பரப்பானது முதலே பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருக்கிறது. தனது அண்ணன் சொல் பேச்சு தவறாத ஆணாதிக்கம் மிக்க தம்பிகள் தனது மனைவிகளை எப்படி படாதப்பாடு படுத்துகின்றனர் என்பதுதான் இந்த சீரியல். 

ethir neechal

இந்த சீரியலை இயக்கி வருபவர் இயக்குனர் திருச்செல்வம். ஏற்கனவே இவர் பல ஹிட் சீரியல்களை சன் டிவியில் கொடுத்துள்ளார். வழக்கமாக தான் இயக்குனர் சீரியல்களில் திருச்செல்வம் நடிப்பது வழக்கம். ஆனால் இந்த சீரியலை இயக்கி மட்டும் வந்தார். அதனால் இந்த சீரியலில் திருச்செல்வம் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

ethir neechal

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் திருச்செல்வம் என்ட்ரி கொடுக்கிறார். கடந்த சில நாட்களாக யார் ஜீவானந்தம் என்ற பில்டப் கொடுக்கப்பட்டு வந்தது. கடைசியாக ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடிப்பது திருச்செல்வம் தான் என தெரிய வந்துள்ளது. இந்த கதாபாத்திரம் சீரியலில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வலுவான குணசேகரன் கதாபாத்திரத்தை எதிர்த்து நிற்கும் கதாபாத்திரமாக ஜீவானந்தம் இருப்பார் என கூறப்படுகிறது. 

Share this story