என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களா ? - நெட்டிசனுக்கு காட்டமாக பதிலளித்த பிரபல செய்தி வாசிப்பாளர் !

fathima babu

 நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு காட்டமாக பதிலளித்துள்ளார். 

தமிழில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. தூர்தர்ஷன் முதல் பல முன்னணி தொலைக்காட்சி வரை பல நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு கே.பாலச்சந்தரின் ‘கல்கி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். 

fathima babu

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கினார். ஜீ தமிழில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட ‘யாராடி நீ மோகினி’ சீரியலிலும் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். 

இதற்கிடையே இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அவர், இந்துவான பாபு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஆஷிக் மற்றும் ஷாருக் என்ற இரு மகன்கள் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா பாபு சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். 

fathima babu

இணையத்தில் வைரலான இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இந்த புகைப்படத்தை பார்த்து சராசரியாக கமெண்ட்டுகளை பதிவிட்டனர். அந்த வகையில் இந்துவான பாபு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நீங்கள் ஏன் உங்கள் பிள்ளைகளுக்கு இந்து பெயர் வைக்கவில்லை என நெட்டிசன் ஒருவன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாத்திமா பாபு, என் கணவருக்கே அது பற்றி எதுவும் பிரச்சனை இல்லாதபோது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கூறினார். 

நியாயமான ஒரு விஷயத்தை தான் நான் கேட்டேன் மேடம். பொது வெளியில் நான் தவறாக எதுவும் கேட்கவில்லையே என்று அந்த நெட்டிசன் கூறினார். நான் ஒரு இந்துவை பற்றி வாசலில் நிக்க பண்ணிக்கிட்டதால் இஸ்லாமிய பெயர்கள் இருக்கிறது. அதனால் நீங்க பொத்திக்கிட்டு போங்க என்றார். 

பாத்திமா பாபுவின் பதிலளித்து கூலாக, பொது மேடையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அந்த நெட்டிசன் கூறினார். இதை கேட்ட பாத்திமா டென்ஷனாகி, பொதுமேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேப்பீங்களோ என காட்டமாக பதிலளித்துள்ளார். இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

 

Share this story