பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 'கானா பாலா'வின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

photo

பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் நேற்று நிகழ்ச்சியிலிருந்து கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டார்.

வழக்கமான சீசன்களிலிருந்து இந்த சீசன் சில பல மாற்றங்கள் வேறுபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சீசன் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஐந்து போட்டியாளர்கள் வெல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டனர். அதிலிருந்து ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க துவங்கியது. இந்த நிலையில் வார வாரம் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கானாபாலா எலிமினேட் ஆனார்.

photo

இந்த நிலையில் கானாபாலா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி அவர் ஒரு நாளைக்கு 25ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

Share this story