பரிமாறப்பட்ட பரிசுகள்... கண்ணீரால் நிரம்பிய பிக்பாஸ் வீடு

big boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறியுள்ள நிலையில், போட்டியாளர்கள் பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மூன்று வாரங்கள் நிறைவறைந்த நிலையில், கடைசியாக தர்ஷா வெளியேறியுள்ளார். தற்போது 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இவர்களில் 9 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இன்று தீபாவளி என்பதால் பிக் பாஸில் போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தாடை, பிரியாணி என்று பிக் பாஸ் வீடே களைகட்டியுள்ளது.


மேலும் இன்றைய தீபாவளி கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் எதிர் அணியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதில் சில போட்டியாளர்கள் கண்ணீருடன் தனது பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளது பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.

Share this story