பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த ஜிபி முத்து... உற்சாகமாக ஹவுஸ்மேட்ஸ்கள் !

gp muthu

பிக்பாஸ் வீட்டிற்கு ஜிபி முத்து மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற இன்னும் இரு வாரங்களே உள்ளது. அதனால் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு எந்த டாஸ்க்கும் கொடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மட்டும் விருந்தினராக வந்து செல்கின்றனர். அந்த வகையில் முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி, விஜே பார்வதி, விஜே ஷோபனா ஆகியோர் வந்திருந்தனர். 

gp muthu

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை சந்தித்த அவர்கள், நிறை, குறைகளை கூறி குழப்பிவிட்டு செல்கின்றனர். அதனால் போட்டியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதையடுத்து இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டரும், அசல் கோலாரும் வந்தனர். அவர்கள் தங்களது சார்பில் சில அறிவுரைகளை கொடுத்துவிட்டு செனறனர். 

gp muthu

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு ஸ்பெஷல் விருந்லினராக ஜிபி முத்து என்ட்ரி கொடுத்தார். ஜிபி முத்துவோடு மெட்டி ஒலி சாந்தியும் வந்தார். இதையடுத்து போட்டியாளர்களிடம் கலகலப்பாக பேசினார். அப்போது இங்கிருந்து வெளியே சென்று படாதபாடு பட்டேன் என்று தனது ஸ்டைலில் சொன்னார்‌. இப்படி ஜிபி முத்துவோடு ஜாலியாக போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. 

 


 

Share this story