ஸ்டார் ஸ்போர்ட்ஸிருந்து விலகிவிட்டாரா பாவனா? – அவரே பதிவிட்ட தகவல்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பாவனா. இவர் சிவகார்த்திக்கேயன், மாகாபா உள்ளிடோருடன் இணைந்து தொகுத்து வழங்கும் விதம் பலருக்கும் பிடிக்கும். இது தவிற நிறைய விருது விழாக்கள், மேடை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்த பாவனா கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியிலிருந்து விலகி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் இணைந்தார்.
அங்கும் ஐபிஎல், சர்வதேச போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் கிட்டதட்ட 6ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துள்ளார் பாவனா. இது குறித்து பதிவிட்டுள்ள பாவனா “ கிட்டதட்ட 6ஆண்டுகள் ஆகிவிட்டது உங்கள் கடிகாரத்தை ரீவைண்டு செய்ய வேண்டிய நேரம் இது. மூன்று எபிசோடுகளை மட்டும் கெஸ்ட் ஹோஸ்டாக தொகுத்து வழங்கியுள்ளேன். என்னை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்த சூப்பர் சிங்கர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. நான் மீண்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு சென்று விடுவேன் இது நிரந்தரமல்ல எனது முழு வேலை அடுத்து தொடங்க உள்ள கபடிதான்” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.