'பிக்பாஸ் சீசன் 6'ன் கடைசி எலிமிநேஷன் - இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்:

photo

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி  ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  அந்த வகையில் தற்போது இறுதிகட்டத்தில் உள்ள பிக்பாஸ்ஸில் கடைசி எலிமிநேஷன் இந்தவாரம் நடைபெற உள்ளது.  இதில் போட்டியாளர்  அமுதவாணன் Ticket to Finalae வை தட்டி சென்றதால் அவர் நீங்களாக அசீம், விக்ரமன், கதிர், ஷிவின், ஏடிகே, மைனா என அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் மக்களின் குறைவான ஆதரவேடு யார் எலிமினேட்டாக உள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

photo

அந்த தகவல் படி அசீம் மற்றும் விக்ரமன் அதிகப்படியான வாக்குகளை பெற்று  இந்த வாரம் பக்காவாக சேஃப்பாக உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை ஷிவின் மற்றும் கதிரவன் பிடித்துள்ளனர். எஞ்சியுள்ள மைனா மற்றும் ஏடிகே தான் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக ஏடிகேதான் கடைசி இடத்தில் உள்ளார். அதனால் அவரே இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

photo

எது எப்படியோ இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சீசனிற்கான வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.  அதிலும் இந்த வாரம் பிக்பாஸ் வீடு சண்டையில்லாமல் மிகவும் ஜாலியாக நகர்வதால், ரசிகர்களின் மனதை வெகுவாக  ஈர்த்துள்ளது.

photo

Share this story