5 அல்ல.. 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. எலிமினேஷனிலும் திடீர் மாற்றம்..!

big boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் செல்லப் போகிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஆறாவது நபரின் பெயரும் அடிபடுவதால் நிகழ்ச்சி கூடுதல் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா ஆகிய 3 பேர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் அன்சிதா குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேறுகிறார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் சேவ் ஆகிவிட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கூறப்படுகிறது.big boss

இந்நிலையில், வரும் வாரம் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் சிவாஜி கணேசன் பேரன் ஷிவகுமார், நடிகை வர்ஷினி வெங்கட், பேச்சாளர் மஞ்சரி, சீரியல் நடிகர் ராயன் மற்றும் மாடலிங் கலைஞர் ராயன் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

இப்போது ஆறாவது நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் மாடலிங் கலைஞர் ரியா செல்ல இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளே போவதால் இரு தரப்பிலும் சமமான எண்ணிக்கை இருக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் டாஸ்க்குகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story