கதறி கதறி அழும் ஜனனி.. திடீரென பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பரபரப்பு !

bigboss 6

டாஸ்க்கின் போது ஜனனி கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது 17 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக மைனா நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வார நாமினேஷனில் அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். 

bigboss 6

பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக கொடுக்கப்படும் டாஸ்க்கால் பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சினையே ஏற்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கால் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கின்றனர். 

bigboss 6

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் டாஸ்க் உட்பட எதிலும் சிறப்பாக செயல்படாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என்று விக்ரமிடம் பிக்பாஸ் சொல்கிறார்.‌ அதற்கு அப்படிப்பட்ட நபர் என்றால் அது ஜனனி தான் என்று விக்ரமன் கூறுகிறார். அதற்கான காரணத்தை கூற விக்ரமன் முயல்கிறார். அப்போது அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆனால் எனக்காக யாரும் சண்டை போட வேண்டாம். நானே ஜெயிலுக்கு போகிறேன் என்று கூறி ஜனனி கதறி கதறி அழும் காட்சிகள் வெளியாகி உள்ளது. 


 

Share this story