பிரபல இயக்குநரிடம் பணிபுரியும் ஜோவிகா!- சூப்பர் தகவல்.

photo

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று எலிமினேட் ஆனார் ஜோவிகா. அவர் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜோவிகா பிரபல இயக்குநர் ஒருவரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறாராம்.

photo

வனிதா விஜயகுமாரின் மகளாக பிக்பாஸ் வீட்டுக்குள் அறிமுகமான ஜோவிகா. பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களுள் குறைந்த வயதுடையவர் ஜோவிகாதான். ஆடம் துவங்கியது முதல் அதிரடியாக ஆடிய ஜோவிகா, படிப்பு முக்கியமா? இல்லையா? என விவாதித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வழங்கி வந்த ஜோவிகா நேற்று குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் ஆனார்.

அவர் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வந்துள்ளது. அதாவது ஜோவிகா பிரபல இயக்குநரான பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறாராம். விரைவில் அவரை இயக்குநராகவோ அல்லது நடிகையாகவோ பார்க்க உள்ளோம்.

Share this story