கமிட்டான ஜூலி –வாழ்த்துகள் சொல்லும் ரசிகர்கள்.

photo

தமிழ் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. அதற்கு முன்பே இவர் ஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றிருந்தார். ஆனால் பிக்பாஸில் கலந்துக்கொண்டு அவர் தனது பெயரை கெடுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.அதன் தொடர்ச்சியாக ஜூலி பல பிரச்சனைகளை சந்தித்தார் .

photo

அடுத்து மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவை பெற்றார். இவர் பல போட்டோ ஷூட் நடத்தி அதன் படங்களை, தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது ஜூலி ஒரு தொலைக்காட்சி தொடரில் கமிட்டாகியுள்ளார்.

photo

ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு  ஒளிபரப்பாகும்கன்னத்தில் முத்தமிட்டாள்தொடரில் தான் ஜூலிகொற்றவை’ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சீரியலில் அவரது எண்ட்ரி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

photo

ஜூலி மாசாக எண்ரிகொடுக்கும் புரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் ஜூலியின் நடிப்பை காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Share this story