‘விஜயகாந்த்’ மறைவு: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண் கலங்கிய ‘கமல்’!

photo

விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பலரும் அவருடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் “ விஜயகாந்த் போல நாம் வாழ முடியுமா என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் நமக்கு புரியும்” என கண் கலங்கி பேசியுள்ளார்.

photo

வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல் வீட்டில் நடந்த பிரச்சனை, முக்கிய நிகழ்வு குறித்து உரையாடுவார். அதுமட்டுமல்லாமல் புத்தக பரிந்துரை, நடப்பு நிகழ்வு குறித்து பேசுவது என பல நிகழ்வுகள் இருக்கும்.

 அந்த வகையில் இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். “ விஜயகாந்தை நினைத்து கண்ணீர் சிந்துவரை விட அவரை நினைத்து புன்னகிப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது. அவரை போல நாம் வாழ முடியுமா என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் நமக்கு புரியும்.” என உருக்கமாக பேசியுள்ளார்.

Share this story