பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டாட்டா காட்ட போகும் கமல்- அப்போ அடுத்த ஹோஸ்ட் யார் தெரியுமா?

photo

ரியாலிட்டி ஷோக்களில் பட்டையை கிளப்பிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். நிகழ்ச்சியில் பலருக்கும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விதம் மிகவும் பிடிக்கும். அவருக்காகவே வார இறுதி எபிசோட் கலைகட்டும். இந்த நிலையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதற்கு காரணம் அவர் இந்த சீசனில் ஒருதலை பட்சமாக பேசுகிறார் என்பதுதான். முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரம் தான். தொடர்ந்து மாயா கேங்கை அவர் தட்டி கேட்காதது, நிக்சன் விவகாரம் குறித்து பேசாதது என பல உள்ளன. ஒரு நிகழ்ச்சியில் நடக்கும் தவறையே தட்டி கேட்காத கமல் எப்படி அரசியல் வாழ்வில் தவறை தட்டி கேட்பார் என விமர்சனங்கள் எழ துவங்கியது. இது அவரது அரசியல் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கமல் ஹாசன், நிகழ்ச்சியிலிருந்து வில முடிவெடுத்துள்ளாராம். அவர் விலகும் பட்சத்தில் இந்த ஷோவை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என தகவல் வந்துள்ளது.

photo

Share this story