கண்ணன் எடுத்த அதிரடி முடிவு..நிலைக்குலைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் !

PandianStores

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கண்ணன் - ஐஸ்வர்யா தம்பதி வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் மற்றும் மூன்று தம்பிகளின் கதைக்களம் கொண்ட இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. அண்ணன் மூர்த்தி முதல் தம்பி குமரனிடம் கடுமையாக நடந்துக் கொண்டதாக கூறி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டார். 

PandianStores

மீனா தங்கை திருமணத்தில் நடந்த குளறுபடிகளுக்கு கண்ணன் தான் காரணம் என தனம் அவரிடம் பல கேள்விகளை எழுப்புகிறார். அது நான் தெரியாமல் செய்தது என்று கண்ணன் கூறி சமாளிக்கிறார். ஆனால் கண்ணனை  அவமானப்படுத்துவதை பொருத்துக் கொள்ள முடியாத மனைவி ஐஸ்வர்யா , தனத்திடம் சண்டை போடுகிறார். 

PandianStores

எப்போது கண்ணனையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்கென்று ஒரு சுதந்திரம் இந்த வீட்டில் இல்லை என்று கூறுகிறார். அப்படியே நினைப்பவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறலாம் என்று மூர்த்தி கோவமாக கூறினார். இதனால் கோபமடையும் ஐஸ்வர்யா கண்ணனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே நிலைக் குலைந்து போயுள்ளது. எப்போதுதான் இவர்கள் பிரச்சனை சரியாகும் என இல்லத்தரசிகள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.   


 

Share this story