முடிவு வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’.. இறுதிக்கட்டத்தை அடைந்த சீரியல் !

kannathil muthamittal

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சீரியல் விரைவில் முடிவு வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

ஜீ தமிழ் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. இந்தியில் சூப்பர் ஹிட்டடித்த ‘துஜ்சே ஹை ராப்தா’ என்ற சீரியலின் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

kannathil muthamittal

இந்த சீரியலில் மனிஷாஜித், திவ்யா பத்மினி, சந்தோஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மனுஷ், ஆஷாராணி நாகேஷ், ஆண்ட்ரூஸ் ஜேசதாஸ், பிரியங்கா, சரத் சந்திரா, மௌனிகா, செந்தில்குமார், சாணக்யா உள்ளிட்டோரும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். 

வி.எம்.செந்தில் குமார் மற்றும் வித்யா ஆகிய இருவரும் இணைந்து இந்த சீரியலை இயக்கி வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த சீரியல் 270 எபிசோடுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பான கதைக்களத்தில் சென்றுக் கொண்டிருக்கும் இந்த சீரியல் நாளையுடன் நிறைவுபெற உள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
 

Share this story