கயல்: வசமாக சிக்கிய கயல், ஆனந்தி – பரபரப்பின் உச்சம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி அதிக ரசிகர்களை பெற்றுள்ள தொடர் கயல். இந்த தொடர் டிஆர்பியிலும் டாப் இடங்களை பிடித்து அசத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோ சீரியல் குறித்த எதிர்பார்பை எக்கசக்கமாக உயர்த்தியுள்ளது.
அந்த வகையில் எழில், ஆர்த்தி திருமண எப்பிசோட் கடந்த ஒருமாதமாக நடந்து வருகிறது. அதில் ஆர்த்திக்கும், ஆனந்திற்கும் திருமணம் நடந்து கதையில் முக்கிய திருப்பத்தை கொடுக்க கதை மேலும் சூடுபிடித்துள்ளது. இது ஒரு புறம் நடக்க மற்றொரு புறம் கயலின் தங்கை ஆனந்தியிடம் தவறாக நடந்துகொண்டவரை அவர் கீழேதள்ளிவிட ஆணியில் அடிபட்டு இறந்துவிடுகிறார். இந்த விஷயம் கயலுக்கு தெரியவர, தனது தங்கையை காப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் கயல். சடலத்தை மண்டபத்திலிருந்து அப்புறபடுத்த கயல், ஆனந்தி முயற்சிக்க அங்கு வரும் காவலர்கள். இந்த இருவரின் நடவடிக்கையால் சந்தேகமடைகின்றனர்.
தொடர்ந்து கயல் தனது தங்கையை எப்படி காப்பாற்றப்போகிறார்? சடலத்தை என்ன செய்ய போகிறார்கள்? தொடர்ந்து விறுவிறுப்பான கதைகளத்தில் தொடர் பயணித்து வருகிறது.