தொடங்குவதற்கு முன்னரே ஹீரோ மாற்றம்... ராதிகா சீரியலில் நடந்த அதிரடி மாற்றம் !

kizhakku vasal

நடிகை ராதிகா தயாரித்து நடிக்கும் புதிய சீரியலின் ஹீரோ, ஒளிப்பரப்பை தொடங்குவதற்கு முன்னரே மாற்றப்பட்டுள்ளார். 

சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்த ராதிகா, பல சீரியல்களில் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் சித்தி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்கள் ரசிகர்களிடையே மிகுந்த பிரபலமானவை. அந்த வரிசையில் தற்போது ‘கிழக்கு வாசல்’ என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார் நடிகை ராதிகா. 

kizhakku vasal

வழக்கமாக சன் டிவி சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த ராதிகா, தற்போது ‘கிழக்கு வாசல்’ சீரியல் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கிறார்.   இந்த சீரியலில் ராதிகாவுடன் இணைந்து நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

kizhakku vasal

 பூவே பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய சீரியல்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் நடிகை அஸ்வினி ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.‌ இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோவாக கமிட்டானவர் நடிகர் சஞ்சீவ். ஆனால் இந்த ஒளிப்பரப்பை தொடங்குவதற்கு முன்னரே வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் புதிய ஹீரோ யார் என்று அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

Share this story