விரைவில் தயாராகிறது ‘கோலங்கள் 2’... இயக்குனர் திருச்செல்வன் கொடுத்த சூப்பர் அப்டேட்

kolangal 2

சூப்பர் ஹிட் சீரியலான ‘கோலங்கள் 2’ சீரியலின் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார். 

சன் டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்கள் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் சீரியல் கோலங்கள். சினிமா நடிகை தேவயானி நடிப்பில் ஒளிப்பரப்பான இந்த சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிப்பரப்பாகி வந்ததது. கடந்த 2003 முதல் 2009 ஆண்டுகள் வரை மொத்தம் 6 ஆண்டுகள் வரை ஒளிப்பரப்பானது. 

kolangal 2

இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கியது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்தார். அதாவது அபி என்கிற பவர்புல்லான கதாபாத்திரத்தில் தேவயானியும், தொல்காப்பியம் என்ற கதாபாத்திரத்தில் திருச்செல்வமும் நடித்திருந்தனர். இவர்களுடன் சத்யபிரியா, நளினி, பொன் வண்ணன், விஜி சந்திரசேகர், தீபா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  

kolangal 2

 இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குனர் திருச்செல்வமும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், கோலங்கள் 2 பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் என தெரிவித்துள்ளார். இது இல்லத்தரசிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Share this story