பார்வையற்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய பாலா - வைரல் வீடியோ

tn

கோடி கோடியாக பணத்தில் புரள்பவர்கள் கூட செய்யாத பல நல்ல காரியங்களை செய்து வருபவர் kpy பாலா. கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை படிப்படியாக உயர்த்தி கொண்டவர்.  நடிப்பில் மட்டுமல்லாது இவரது கவுண்டர்களிலும் அனல் பறக்கும்.  பாலாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் அவரது கவுண்டருக்கும்,  காமெடிக்கும் இருந்தாலும் அவரது தன்னலமற்ற செய்கைக்காகவே பல பேர் பாலாவின் ரசிகர்களாக இன்று மாறியுள்ளனர்.

tn

சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கும் பாலா தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தனக்காக எடுத்து வைத்துக்கொண்டு மற்ற அனைத்து தொகையையும் பொது நலத்திற்காக செலவிட்டு வருகிறார். அப்படி வசதி வாய்ப்பற்ற கிராமப்புற மக்களுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல சேவைகளை பாலா வழங்கி வருகிறார். மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சமீபத்தில் மூன்று சக்கர வாகனம்,  பெண் ஒருவருக்கு ஆட்டோ ,  இளைஞர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்தது என பாலாவின் நற்செயல்கள் இணையத்தில் அவரை கொண்டாடி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

 இந்த சூழலில் கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்பதால் பணம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்திற்கு தேடிப்போய் உதவியுள்ளார் பாலா.  ராகவா லாரன்ஸ் உதவியுடன் இத்தொகையை கொடுத்ததாகவும் சிறுவனின் கண் அறுவை சிகிச்சைக்கு தேவையான வேலையை ஆரம்பியுங்கள் என்றும் தைரியம் கொடுத்து வந்துள்ளார் . பாலா செய்த உதவியை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை அவரது காலில் விழுந்து வணங்கியுள்ளார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share this story