'கேபிஓய் பாலா' செய்த தரமான சம்பவம் – புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்.

photo

சின்னத்திரையில் பிரபல  காமெடி நடிகராக அறியப்படுபவர் கேபிஓய் பாலா. இவரது உதவும் குணம் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். அதே போன்றதொரு செயலைதான் தற்போது இவர் செய்துள்ளார்.

photo

அதாவது, வெள்ளித்திரையில் ‘வாமா மின்னல்’ என்ற ஒன்றை வசனத்தால் பிரபலமான காமெடி நடிகர் பாவா லெட்சுமணன், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.  நோயின் தாக்கம் காரணமாக காலின் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் குணமடையாமல் விரலை அகற்றும் நிலை ஏற்பட்டது. இவர் தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல நடிகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கேபிஓய் பாலா,  பாவா லட்சுமணனை சந்தித்து “ உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஆனால் எனது அக்கவுண்டில் ரூ 32,000 மட்டுமே இருந்தது, அதில் 2000 ரூபாயை பெட்ரோல் செலவிற்கு வைத்துக்கொண்டு மீதமுள்ள 30000 ரூபாயை உங்களுக்கு கொடுக்கிறேன்” என பணத்தை கொடுத்துவிட்டு அவருடன் சிறிது நேரம் பேசிசென்றுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பாலாவின் தாராள மனதை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share this story