'மணிமேகலை'யை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’யிலிருந்து வெளியேறும் ‘குரேஷி’? - அவரே வெளியிட்ட பதிவு!

photo

பிரபல தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுள் முக்கியமான ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்சியில் இருக்கும் குக் முதல், கோமாளி, தொகுப்பாளர், நடுவர்கள் என அனைவருக்கும் தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் பிரபல கோமாளியான குரேஷி பதிவிட்டுள்ள பதிவு, அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

photo

அதாவது ‘நன்றி CWC எல்லா நினைவுகளுகாகவும்’ என பதிவிட்டிருந்தார்.  மூன்று சீசன் களை கடந்து தற்போது நான்காவது சீசனில் பயணிக்கும் இந்த நிகழ்ச்சியிலுருந்து, அது வரை கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் பலரது விருப்பமான கோமாளியான மணிமேகலை கடந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு தவிற்க முடியாத காரணத்தால் சென்றுவிட்டார். இந்த நிலையில் குரேஷியுமா? என ரசிகர்கள் புலம்பி தீர்த்துள்ளனர்.

photo

அந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதனை நீக்கிவிட்டு, ‘உடம் மண்ணுக்கு உயிர் CWCக்கு’ என பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவை பார்த்த பின்னர்தான் ஹப்பாடா…… என பெருமூச்சு விட்டுள்ளனர் ரசிகர்கள். இதம் மூலமாக அவர் நிகழ்ச்சியில் நீடிப்பார் என நம்பப்படுகிறது. 

photo

photo

photo

Share this story