நான் லெஸ்பியனா... உங்களுக்கு அறிவே இல்லையா ?.. கண்ணாபின்னான்னு திட்டிய ஜாக்குலின் !

vj jacqueline

தன்னை லெஸ்பியன் என்று கூறியவர்களை விஜய் டிவி ஜாக்குலின் திட்டியுள்ளார். 

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் விஜே ஜாக்குலின். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் தனது வித்தியாசமான குரலால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.  அதன்பிறகு தனது திறமையால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் விஜே ஜாக்குலினுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

vj jacqueline

சின்னத்திரையில் கலக்கி வரும் ஜாக்குலின் சினிமாவில் நடித்து வருகிறார். முதலில் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலாமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இருப்பினும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. 

vj jacqueline

 சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே ஜாக்குலின் அவ்வெவ்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோன்று வெளியிடும் புகைப்படங்களை பார்த்த, குண்டாக இருப்பதாக சிலர் உருவகேலி செய்வதும் உண்டு. இதையடுத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்த ஜாக்குலின் தற்போது ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ளார். இந்த புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜாக்குலினிடம், நீங்கள் லெஸ்பியன் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டார். இங்கே மூன்று பேருடன் சேர்த்து புகைப்படம் பதிவிட்டால் கூட அப்படித்தான் சொல்கிறார்கள். என்னை மட்டும் ஏன் இப்படி தவறாக நினைக்கிறீர்கள். இப்படி சொல்லும் அவர்களுக்கு அறிவே இல்லையா ?. அவருக்கு ஏன் அப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. என்னை மட்டும் அப்படி சொல்லவில்லை பல பிரபலங்களையும் அப்படித்தான் சொல்கிறார்கள் என காட்டமாக தெரிவித்தார். 

 

 

 

Share this story