'நீங்க ஜட்ஜ் பண்ணறதுல ஜீரோ'... மகேஸ்வரி - அசீம் இடையே வெடித்த மோதல் !

bigboss

மகேஸ்வரி மற்றும் அசீம் இடையே பயங்கரமாக வெடித்த மோதல் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தினம்தோறும் சண்டை, முட்டல், மோதல் என என அடுத்தடுத்து ஒவ்வொரு சம்பவமாக அரங்கேறி வருகிறது. அதனால் ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீடு கலவர பூமியாக மாறி வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார் ஆகிய மூவரும் வெளியேறிவிட்டனர். 

bigboss

இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களிடையே பல பிரச்சனைகள் வெடித்தது. இதைத்தொடர்ந்து டிவி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். இதில் செய்தி வாசிப்பது, நடனம், குக்கிங் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 

bigboss

இந்நிலையில் இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.  அதில் மகேஸ்வரியும் அசீமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  உங்களுக்கு நியூஸ் பற்றி எந்த நாலேஜும் இல்லை. நீங்க ஜட்ஜ் பண்றதுல ஜீரோ என்று அசீம் கூறுகிறார். இதனால் கோபமடையும் மகேஸ்வரி, அசீமை கடுமையாக பேசும் காட்சிகளும் அந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. 


 

Share this story