பிரபல தொகுப்பாளினி திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள் !

malayala manorama vj subi suresh

பிரபல மலையாள தொகுப்பாளினி சுபி சுரேஷ் திடீரென மரணமடைந்துள்ளார். 

மலையாள தொலைக்காட்சிகள் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் சுபி சுரேஷ். தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். பொதுவாக ஆண்களே மிமிக்ரி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஒரு பெண்ணாக மிமிக்ரி செய்து ரசிகர்களை கவர்ந்தார். 

malayala manorama vj subi suresh

பல தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் மனோரமா டிவியில் ‘மேட் ஃபார் ஈச் அதர்’, சூர்யா டிவியில் ‘குட்டி பட்டாளம்’ போன்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதுதவிர கனகசிம்ஹாசனம், காரியஸ்தான், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், எல்சம்மா என்ன ஆங்குட்டி, பச்சகுதிர உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

42 வயதாகும் அவர், கல்லீரல் பாதிப்பால் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story