‘மந்திரப் புன்னகை’ சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள் !
‘மந்திரப்புன்னகை’ சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளார்.
முன்னணி தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று ‘மந்திரப் புன்னகை’. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. 150 எபிசோடுகளை கடந்து சஸ்பென்ஸ் சீரியலாக இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் காயத்ரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மெர்ஷீனா நடித்து வந்தார். இந்த கதபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென மெர்ஷீனா விலகியுள்ளார். அவரது திடீர் விலகல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த சீரியலில் காயத்ரி கதாபாத்திரத்தில் புதியதாக சத்யா நாராயணன் நடிக்கவுள்ளார். மெர்ஷீனா விலகியதால் அவரது கதாபாத்திரத்தில் தற்போது சத்யா நாராயணன் நடித்து வருகிறார். மெர்ஷீனா போன்று சத்யாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவாரா என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

