விபத்தில் சிக்கிய ‘மணிமேகலை’ – புகைப்படம் வெளியிட்டு வருத்தம்.

photo

தொகுப்பாளினியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீனியர் கோமாளியுமான மணிமேகலை விபத்தில் சிக்கி காலில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

photoபிரபல தொலைகாட்சியில் விஜேவாக இருந்த மணிமேகலை சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பின்னர் நட்சத்திர தொகுப்பாளினியாக உயர்ந்தார். தொடர்ந்து எக்கசக்கமான ரசிகர்களை பெற்ற இவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹூசைன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் இவரது திருமணத்திற்கு சம்மதிக்காததால் அவர்களது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ், குக்வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பிரபலமானார். அதிலும் கோமாளியாக அவர் செய்யும் சேட்டைகளுக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். அதேப்போல பல தனியார் நிகழ்ச்சிகள், விருது விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் காலில் பெரிய கட்டுடன் கட்டிலில் பரிதாபமாக அமர்ந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “ கீழே விழுந்து காலில் பலத்த அடிப்பட்டுவிட்டது, எழக்கூட முடியவில்லை” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியும், விரைவில் குணமடைய வாழ்த்துகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

Share this story