பெஸ்ட்…பெஸ்ட்….’லெஜண்ட் சரவணன்’ உடன் ‘மணிமேகலை’ - குக் வித் கோமாளியை விட்டு வலக காரணம் இதுதான்!

photo

லெஜண்ட் சரவணன் உடன் மணிமேகலை மற்றும் ஸ்ருதிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

photo

90’ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான ஒரு விஜே, மணிமேகலை. பலருக்கும் பிடித்தமானவராக வலம் வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி'யில் கலந்து கொண்டு தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வலகுவதாக அறிவித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை அவர் வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  

photo

அதாவது, மணிமேகலை , லெஜண்ட சரவணன், நடிகை ஸ்ருதிகா மூவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, புதிதாக சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளோம் என்றும் அதன் பிறகு லெஜண்ட் சரவணனையும் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டோம். மனுஷன் ரொம்பவே ஹம்பலானவர். என்னோட பைத்தியக்கார தோழி ஸ்ருதிகா அர்ஜுன் உடன் நடந்த விளம்பர ஷூட் செம ஃபன்னாக சென்றது என பதிவிட்டுள்ளார்.

photo

சரவணன் அருள், தொழிலதிபராக இருந்து தற்போது ‘லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலமாக சினிமாதுறையில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான தனது கெட்டப்பை அறிமுகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

 

Share this story