பிரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கிய விஜே மணிமேகலை.. நெகிழ்ச்சி பதிவு

manimegalai

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சன் மியூசிக் சேனல் மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடன கலைஞர்  ஹூசேன் என்பவராய் காதல் திருமணம் செய்துகொண்டார். 

அவரது திருமண கதை குறித்து அவரே பல பேட்டிகளில் கூறியதால் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். விஜய் டிவி பக்கம் வந்தவர் கணவருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொகுப்பாளினியாக கலக்குவது என பிஸியாக இருந்தார். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அவர் தொகுப்பாளினி பிரியங்கா உடன் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். vj

அதன் பின் விஜய் டிவியில் பங்கேற்காத மணிமேகலை தற்போது சென்னையின் முக்கிய இடத்தில் பிரீமியம் அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதகாக அறிவித்துள்ளார்.  அதற்கு இன்று டிசம்பர்5ஆம் தேதி எளிமையான முறையில் கிரகப்பிரவேசத்தை முடித்திருக்கிறார்.


 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், Hussain Manimegalai சொந்த வீடு HOUSE WARMING day  எனவும், எங்கள் திருமணத்தின் முதல் நாளிலிருந்து எங்கள் பயணம் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள், திருமணமான முதல் வருடத்தில் 10 ஆயிரத்தை வாடகையாக செலுத்துவதில் இருந்து, சென்னையின் முக்கிய இடத்தில் பிரீமியம் அபார்ட்மெண்ட்டை சொந்தமாக்குவது வரை எங்களின் மிகப்பெரிய கனவும் சாதனையும் ஆகும் என தெரிவித்துள்ளார். மேலும்,  பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது உண்மையில் எங்களை வலிமையாக்கியது மற்றும் நம்பிக்கையை அளித்தது,  நாங்கள் நாளை டிசம்பர் 6ஆம் தேதி எங்கள் திருமண நாளைக் கொண்டாடுகிறோம், அந்த சமயத்தில் எங்கள் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இந்த வீட்டை 2021 இல் முன்பதிவு செய்தேன், ஒப்படைப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தேன் & இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. நாங்கள் அதைக் கனவு கண்டோம், கடினமாக உழைத்தோம் & கடவுள் இந்த வாழ்நாள் பரிசைக் கொண்டு எங்களை ஆசீர்வதித்தார்,   எப்போதும் ரசிகர்களின் அனைத்து வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் தேவை என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே மணிமேகலை தனது சொந்த கிராமத்தில் ஒரு இடத்தை வாங்கி அதில் வீடு, பார்ம் ஹவுஸ் கட்டி வருவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 
  

Share this story