கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை ?... சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ !

manimegalai

பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல தொலைக்காட்சிகளில் பிரபலமான விஜேவாக இருப்பவர் மணிமேகலை. முதல்முதலில் சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளினியாக மாறினார். அதன்பிறகு சன் டிவியிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் விஜய் டிவிக்கு சென்ற அவர், 'மிஸ்டர் அணட் மிஸ்ஸஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

manimegalai

இதையடுத்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் கடைசி சீசனிலும் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேறிவிட்டார். இதற்கிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட அவர்கள், தற்போது தனியாக வாழ்த்து வருகின்றனர்.‌ 

manimegalai

இந்நிலையில் விஜே மணிமேகலை குண்டாக இருக்கும் வீடியோக்கள் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக கருத்து பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் அவரது வீடியோக்கள் அதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. 

 

 

 

 

Share this story