பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மீது திருமண மோசடி புகார்

ரூ.18.5 லட்சம் ஏமாந்ததாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை மீது தொழிலதிபர் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பொன்னி, ஆனந்த ராகம் போன்ற ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான ரிஹானா பேகம். இவர் திருமணம் செய்து, பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்கண்ணன் என்பவர் வேளச்சேரியில் ரெஸ்டோ பார் நடத்திவருகிறார். இந்நிலையில் ராஜ்கண்ணன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது திருமண மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ரிஹானா பேகம் மீது மட்டுமின்றி அவரது தாய் மும்தாஜ், கணவர் ஹாபிபுல்லா ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜ் கண்ணன் அளித்துள்ள புகாரில், “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ரிஹானா பேகம் தன்னுடைய நண்பர் மூலம் தனக்கு அறிமுகமானார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று விட்டதாகவும், 2 குழந்தைகளும் தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறினார். இதனால் நானும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, எங்களுடைய திருமணம் எனது நண்பர் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின் என்னுடைய வீட்டிற்கு அழைத்தபோது உங்களுடைய வீட்டிற்கு வர முடியாது எனக் ரிஹானா கூறிவிட்டார். அதேபோல் திருமணத்திற்கு பிறகு கணவர் ஹபிபுல்லாவுடன் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரியவந்தது. விவாகரத்து பெற்றதாக கூறி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியது மட்டுமின்றி தன்னிடம் இருந்து ரூ. 18 லட்சத்திற்கு மேல் ரிஹானா பெற்றுள்ளார், அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.