‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் இருந்து விலகியது ஏன் ?.. பிரபல நடிகை விளக்கம் !

meenatchi ponnunga

 ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் இருந்து விலகியது ஏன் என்று நடிகை அர்ச்சனா விளக்கமளித்துள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பு கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘மீனாட்சி பொண்ணுங்க’. கடந்த 8 மாதங்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் ஒரு அம்மாவும், அவரின் மூன்று பெண்ணின் கதையாகும். தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

meenatchi ponnunga

இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரம் என்பது மிக முக்கியமானது. அந்த கதாபாத்திரத்தில் 80-களில் பிரபலமான நடிகையாக இருந்த அர்ச்சனா நடித்து வந்தார். இந்நிலையில் வரவேற்பை அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா திடீரென சமீபத்தில் விலகினார். 

meenatchi ponnunga

இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியது ஏன் என்று நடிகை அர்ச்சனா விளக்கமளித்துள்ளார். அதில் முதல்முதலில் கன்னடத்தில் ஒளிப்பரப்பான இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது. அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்றவுடன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனால் உடனே இந்த சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

முதலில் கதை நன்றாக இருந்தது. ஆனால் போகபோக கதை வேறு விதமாக சென்றது. அதனால் பிடிக்காத ஒரு விஷயத்தை என்னால் எப்படி செய்யமுடியும். செய்யும் வேலையை மன நிறைவுடன் செய்யவேண்டும். எனவே தான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறினார். 

 

Share this story