மீனாட்சியாக களமிறங்கும் பிரபல நடிகை.. ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் அப்டேட்

Meenakshi Ponnunga

‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் புதிய மீனாட்சியாக பிரபல நடிகை நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழில் இல்லத்தரசிகளை கவர்ந்த சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது ‘மீனாட்சி பொண்ணுங்க’. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. மீனாட்சியும், அவரது மூன்று பொண்ணுங்களும் சீரியலின் பிரதான கதாபாத்திரங்கள். 

Meenakshi Ponnunga

இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரம் என்பது மிக முக்கியமானது. அந்த கதாபாத்திரத்தில் 80-களில் பிரபலமான நடிகையாக இருந்த அர்ச்சனா நடித்து வந்தார். மிகுந்த வரவேற்பை பெற்ற அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா திடீரென விலகினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Meenakshi Ponnunga

இதையடுத்து விலகலுக்கான காரணத்தை நடிகை அர்ச்சனா கூறியிருந்தார். அதில், முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் போகபோக கதை வேறு விதமாக சென்றது. அதனால் பிடிக்காத ஒரு விஷயத்தை என்னால் எப்படி செய்யமுடியும். செய்யும் வேலையை மன நிறைவுடன் செய்யவேண்டும். எனவே தான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியிருந்தார். 

Meenakshi Ponnunga

இதைத்தொடர்ந்து அர்ச்சனாவிற்கு பதில் மீனாட்சி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் சீரியல் குழுவினரோ மீனாட்சி கதாபாத்திரம் இல்லாமலேயே சீரியலை நகர்த்தி வந்தனர். இதையடுத்து மீனாட்சி தீ விபத்தில் இறந்துவிட்டது போல அவரது அஸ்தியை காண்பித்து அந்த கதாபாத்திரத்திற்கு எண்ட் கார்டு போட்டிருந்தனர். இதனால் மீனாட்சி கதாபாத்திரம் இல்லாமல் போனது ரசிகர்களை அதிருப்தியடைய செய்ததது. 

இந்நிலையில் அர்ச்சனாவிற்கு பதில் பிரபல நடிகை ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். இனி வரும் எபிசோடுகளில் மீனாட்சியாக நடிகை ஸ்ரீ ரஞ்சனி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

Share this story