ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெறும் சக்தி.. சதித்திட்டம் தீட்டும் புஷ்பா !

meenatchi ponnunga

ஐஏஎஸ் தேர்வில் சக்தி வெற்றிப்பெறுவதால் அதை எப்படி கெடுப்பது என்று ‘புஷ்பா’ சதித் திட்டம் தீட்டுகிறார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியல் ‘மீனாட்சி பொண்ணுங்க’. மீனாட்சி மற்றும் அவரது மூன்று பொண்ணுங்களும் தான் இந்த சீரியல். 

meenatchi ponnunga

தற்போதைய கதைப்படி வெற்றியின் கையில் சக்தி கட்டிய கயிற்றை மீனாட்சி அம்மா கழற்றி விடுகிறார். இதையடுத்து சங்கிலியை போட்டு வெளுத்தெடுக்கிறார் வெற்றி. இதனால் பூரித்து போகும் மீனாட்சி, வெற்றி போட்டோவை மாட்டி குடும்பத்திற்கு இனி வெற்றி தான் தலைவன் என்று சொல்கிறார். 

இதைத்தொடர்ந்து சக்திக்கு ஐஏஎஸ் தேர்வு முடிவு வருகிறது. அதில் சக்தி வெற்றிப் பெறுவதால் குடும்பத்தினருக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறார். மறுபுறம், சங்கிலியுடன் சேர்ந்து திட்டம் புஷ்பா, சக்தி இன்டர்வியூவிற்கு போகக்கூடாது என்று நினைக்கிறார். இதனால் அடுத்து என்னவாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

 

 

Share this story