ஆண்கள் vs பெண்கள் : விவாத மேடையாக மாறும் பிக் பாஸ் வீடு.. ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ் 8ல் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதில் ஆண்கள் அணியில் இருந்த முத்துக்குமரன் பெண்கள் அணிக்கு சென்றுள்ளார். அதே போல் பெண்கள் அணியில் இருந்த பவித்ரா ஆண்கள் அணிக்கு சென்றுள்ளார். மூன்றாவது நாளான இன்று வெளிவந்த முதல் ப்ரோமோவில் பவித்ரா மற்றும் விஷால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து காட்டப்பட்டு இருந்தது. பின் வெளிவந்த இரண்டாவது ப்ரோமோவில் ரஞ்சித் மற்றும் ரவீந்தர், ஒருவரை ஒருவர் எல்லைமீறி பேசி மோதிக்கொண்டனர். இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீடு விவாத மேடையாக மாறியுள்ளது. ஆம், நம்பிக்கை உரியவர்கள் யார் ஆண்களா அல்லது பெண்களா என இரு அணிகளுக்கும் இடையே பட்டைமன்றம் போல் விவாதம் அரங்கேறவுள்ளது.
#Day3 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 9, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #VijayTelevision #VijayTV pic.twitter.com/uvDFwE2Rwe