‘மெட்டி ஒலி 2’ உருவாகிறதா ?... உண்மையென்ன விளக்கமளித்த ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் !

metti oli

 ‘மெட்டி ஒலி’ சீரியலின் இரண்டாவது சீசன் உருவாகவுள்ளதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் திருசெல்வம் விளக்கமளித்துள்ளார். ​

சன் டிவியில் இல்லத்தரசிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியல் ‘மெட்டி ஒலி’. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடராக ஒளிப்பரப்பான இந்த சீரியலை திருமுருகன் இயக்கியிருந்தார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா,சேத்தன், நீலிமா ராணி மற்றும் திருச்செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

metti oli

இந்த சீரியலில் வரும் ஓபனிங் பாடலான அம்மி.,அம்மி.,அம்மி மிதிச்சு… அருந்ததி முகம் பார்த்து… என்ற பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. இன்றைக்கு மறக்கமுடியாத பாடலாக அந்த பாடல் உள்ளது.  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் ஒளிபரப்பான இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் 850 எபிசோடுகளை கடந்தது. 

metti oli

இந்நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதன் இயக்குனர் திருசெல்வம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் மெட்டி ஒலி 2 உருவாகுவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் மெட்டி ஒலி சீரியலில் நடித்தது எதிர்பாராதது தான். நான் நடிக்கவில்லை என்று சொல்லியும் திருமுருகன் தான் என்னை நடிக்க வைத்தார். இப்போது மெட்டி ஒலி 2 வரபோவதாக சொல்கிறார்கள். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை என்று கூறினார்.    

 

 

Share this story