மலையாளத்தில் ரீமேக்காகும் சன் டிவி சீரியல்... என்ன சீரியல் தெரியுமா ?

mr manaivi

சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று மலையாளத்தில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சன் டிவியில் பல சீரியல்கள் தற்போது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது ‘மிஸ்டர் மனைவி’. கடந்த மார்ச் மாதம் ஒளிப்பரப்பை தொடங்கிய இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. 

mr manaivi

 இந்த சீரியலில் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான ஷபானா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வேலைக்கு வெளியே செல்ல நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமைப்பதை குறிகோளாக வைத்திருக்கும் ஆணுக்கும் இடையே உள்ள கதைதான் இந்த சீரியல். அதிலும் நாயகி ஷபானா மற்றும் நாயகன பவன் ரவீந்திரா இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் தமிழில் ‘மிஸ்டர் மனைவி’ வெற்றியை அடுத்து மலையாளத்தில் ரீமேக்காகி வருகிறது. நின்னிஸ்டம் என்னிஸ்டம் என்ற பெயரில் உருவாகி வரும் அந்த சீரியல் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த சீரியலில் சாண்ட்ரா என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story