அடக்கடவுளே!….- முத்தழகு சீரியல் நடிகைக்கு நிகழ்ந்த கார் விபத்து!

photo

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக  அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி. அவர் விபத்தில் சிக்கி தான் உயிர்பிழைத்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ தொடர் மூலமாக அறிமுகமானவர் வைஷாலி, தொடந்து ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய்டிவியில் முத்தழகு மற்றும் சன் டிவியில் ஆனந்த ராகம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கியதாகவும், சீட் பெல்ட் அணிந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மேலும் ஏர் பேக் தன்னை பெரும் விபத்திலிருந்து காத்ததாகவும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது கண்டிப்பாக சீட்பெல்ட் அவசியம்” எனவும் அந்த வீடியோவில் பேசி பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் குணம்பெற வாழ்த்துகளை பகிந்து வருகின்றனர்.

Share this story