‘நக்ஷத்ரா’வுக்கு வளைகாப்பு – கலந்துக்கொண்ட முக்கிய பிரபலங்கள்.
பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ரா கர்பமாக இருந்த நிலையில் அவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. அதற்கான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஜீ தமிழில் பிரைம் டைமில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ தொடரில் வெண்ணிலாவாக நமக்கு அறிமுகமானவர் நக்ஷத்ரா. இந்த தொடரில் இவரது நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்றது. அந்த சீரியல் முடிந்த நிலையில் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ‘வள்ளி திருமணம்’ எனும் தொடரில் நடித்தார். இந்த நிலையில் சீரியல் தயாரிப்பாளரான விஷ்வா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ந்து தான் கர்ப்மாக இருப்பதை அறிவித்த நக்ஷதரா கர்பகால புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது நக்ஷத்ராவுக்கு வளைகாப்பு வைபவம் நடந்துள்ளது. இந்த விழாவில் சைதரா ரெட்டி, தேவையானி உள்ளிட்ட அவருடன் சீரியலில் பணிபுரிந்த பலரும் கலந்துகொண்டு நக்ஷத்ராவை மகிழ்வித்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.